
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகள் பலரும் சிபிசிஐடி போலீஸாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியில் புதிய மாநில தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி வழக்கறிஞர் ஆனந்தன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.