
தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் புதிய கட்டண விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் அளவைப் பொறுத்து 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என்று சுங்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 5% முதல் 7 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதம் 37 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.