தமிழ் சினிமா உட்பட பல்வேறு புதிய படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனவுடன் அதை தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் தளத்தின் முக்கிய அட்மின் ‌ தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்‌. அதன்படி மதுரையில் வைத்து ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரள சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இவர் ஒரு படத்திற்கு ரூ‌.5000 கமிஷன் பெற்று இணையதளங்களில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அதாவது புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது முதல் நாளிலேயே சிறிய கேமரா வைத்து அதனை வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த வேலையை செய்து வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளார்.