தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு செய்தி  சேகரிப்பதற்காக சென்ற பத்திரிகையாளர்கள் மீது நடிகர் விஜயின் பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செய்தி சேகரிப்பதற்காக சென்ற பத்திரிகையாளர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் பத்திரிகையாளர்கள் மற்றும் பவுன்சர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அங்கிருந்த ஒரு பத்திரிகையாளரை அவர்கள் அடித்து விட்டனர்.

அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்து விட்டார். உடனடியாக  சக பத்திரிகையாளர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை அமைதிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதாவது ஏற்கனவே சற்று உடல்நலம் பாதித்திருந்த பத்திரிகையாளரை  அவர்கள் தள்ளிவிட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் கலங்கியபடி அங்கிருந்து செல்லும் வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.