தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடிகர் விஜய் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு
நடைபெறுகிறது.

இந்த மாநாடு குரும்பபாளையம் பகுதியில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த அறிவிப்பை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.