தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இன்று காலை விஜய் தன்னுடைய வீட்டில் இருந்து ஏகனாபுரம் கிளம்பி சென்ற நிலையில் நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை பொதுமக்களை சந்திக்க விஜய்க்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் வாகனங்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படும் என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் இன்று பரந்தூர் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்யும் நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் தன் காரில் அங்கு சென்றார்.

அப்போது அவருடைய வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டு உங்கள் வாகனத்திற்கு வருவதற்கு அனுமதி வாங்கவில்லை என்று கூறி உள்ளே செல்ல அனுமதி வழங்கவில்லை. முன்னதாக காஞ்சிபுரம் எஸ்பிஐ சந்தித்து விஜய் பரந்தூர் செல்ல அனுமதி வாங்கியதே வெங்கட்ராமன் தான். மேலும் அப்படி இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகத்தினர் வழங்கிய அனுமதி வழங்க வேண்டிய கார்கள் பட்டியலில் வெங்கட்ராமன் கார் இல்லை என்று கூறி போலீசார் அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களுக்கும் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.