
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. வி சாலை என்ற இடத்தில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு காலை முதலே மக்கள் கூட்டம் வர தொடங்கியது. இந்நிலையில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜயின் பெற்றோர் வந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் முதல் மாநில மாநாடு தொடங்கிவிட்டது. மேலும் அவர் கொடிக்கம்பம் ஏற்றும் இடத்தில் நிர்வாகிகள் கடல் அலை போல் திரண்டுள்ளனர். நடிகர் விஜய் தற்போது கொடியேற்ற போகும் நிலையில் 6:00 மணி அளவில் உரையாற்ற இருக்கிறார்.