தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் ஒருவன் தான் படிக்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரம்மபுரத்தில் உள்ள ஷ்ரிஷ்டி பள்ளிக்கு இ-மெயில் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் காவலரிடம், தான் விளையாட்டாக மெயில் அனுப்பியதாக கூறிய நிலையில் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.