மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என கூறப்படும் வேளையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இதற்கு பதிலளித்துள்ளார். திமுக கூட்டணியில் மநீம இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால், தேர்தலில் போட்டியிட சீட் கேட்காமல் புதிய கட்சிகள் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றார்.