
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி மனு அளிக்கப்பட்டது. பாரத் ஹிந்து முன்னணியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியாக உள்ளதால் அதில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதமான எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.