
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டுள்ளனர். தமிழக அரசும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கோட் படம் படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு திரையரங்குகள் முன்பாக பிளக்ஸ், பேனர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க அனுமதி கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைப்பதற்கு காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதற்கு உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.