தமிழ்நாட்டில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் பட்டாசுகளை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏற்பட்ட வெடிவிபத்துகள் மற்றும் காயம் குறித்து தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடி விபத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதன் பிறகு 544 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதன் பிறகு மாநில முழுவதும் பட்டாசு மற்றும் ராக்கெட் போன்ற வெடி விபத்துகள 150 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 48 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மேலும் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் விபத்துக்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் குறிப்பிட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடித்த குற்றத்திற்காக மட்டுமே 345 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது