தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தீபாவளி பண்டிகைக்கு பொது மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரில் விலகி நல் விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நிற்கட்டும். தீப ஒளி திருநாளை பாதுகாப்பாக கொண்டாடி மகிழ்வோம். மேலும் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார்.