கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் போது ஒரு ஏணியை கொண்டு சென்றனர். அந்த ஏணி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதாக தெரிகிறது.

இதனால் மின்சாரம் பாய்ந்து விஜயன் (52), சோபன் (45), மனு (42), ஜஸ்டிஸ் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.