
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அருணாச்சலில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளிலும், சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் தான் நடைபெற இருந்தது. எனினும், இரு மாநில பேரவைகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதால் முன்கூட்டியே எண்ணிக்கை நடக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன