உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தால் கணினி சார்ந்த துறைகள் தவித்து வருகின்றன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத் ஏற்பட்டுள்ள காரணத்தால் செய்வது அறியாது பயனர்கள் குழம்பி போய் உள்ளனர். இதன் காரணமாக பொருளாதார மற்றும் தொலைதொடர்பு சேவைகள் உலக அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Crowdestrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக சேவை முடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மைக்ரோசாப்டின் கிளவுட் சேவைகளில் ஏற்பட்ட பெரும் இடையூறு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலிழப்பு பல விமான சேவைகளை பாதித்துள்ளது.