தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருடைய புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியின் போது சந்தியா தியேட்டரில் அல்லு அர்ஜுனை காண வந்த ரசிகை ரேவதி உயிரிழந்தார். அவருடைய மகன் ஸ்ரீதேஜ் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வழங்கி ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.