
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு. பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர்கள் தற்போது அதிமுகவில் கூண்டோடு ஐக்கியமாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்கள் ஆதரவாளர்களோடு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஏற்கனவே சமீப காலமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி மாற்றுக் கட்சிகள் இணைந்து வரும் நிலையில் தற்போது வடசென்னை மாவட்ட தலைவர் உட்பட பலர் விலகி அதிமுகவில் இணைந்துள்ளது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட ஏராளமானோர் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.