கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ள நிலையில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் விற்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆகியோர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்ற பிரதமரும் அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பத்துள்ளார்.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் கவலையை அளிக்கிறது. அந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.  கேரள முதல்வரை செல்போனில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் தொடர்பாக பேசியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நிலச்சரவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.