கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழக லாரி ஓட்டுநர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தமிழகத்தைச் சேர்ந்த சின்ன கண்ணன் மற்றும் முருகன் ஆகியோர் கடந்த 16-ம் தேதி சமையல் எரிவாயு லாரியை ஓட்டி சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் செல்லும் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர்  ஸ்டாலின் தற்போது இருவரின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அதன்படி உயிரிழந்த லாரி ஓட்டுநர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.