
சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு விசாரணையின் போது கூறியதாவது, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கி செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும்.
சாதிகள் இல்லையடி பாப்பா என படித்த பாடங்களின் அடிப்படையில் நிற்க வேண்டாமா? இந்த விவகாரத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால், நாளைய வரலாறு அதனை நினைவு கொள்ளும் என வழக்கு ஒன்றின் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.