
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரியும், மோசடிகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.