
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35 லிருந்து 37 அடியாக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 0.74 டிஎம்சி நீரை கூடுதலாக சேமிக்க முடியும். இதற்காக விரிவான ஆய்வுகள் முடிவுற்று திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாக நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.