தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவருடைய மனைவி பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இவர் சமீபத்தில் அந்த கட்சியின் தலைவர் ஆனந்தனை விமர்சித்திருந்தார்.

அதாவது கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது தன்னுடைய ஆதரவாளர்களை பொற்கொடி திரட்டி ஆனந்தன் தனக்கு எதிராக காழ்புணர்ச்சியுடன் செயல்படுவதாக கட்சியின் மேலிட பிரதிநிதிகளுக்கு புகார் வழங்கினார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்குவதாக கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதில் கவனம் செலுத்தும் விதமாக அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக மத்திய ஒருங்கிணைப்பாளர் சமாஜ் ராஜாராம் அறிவித்துள்ளார்.