
பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. பாலியல் புகாரில் பிரிடஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததால் விருதை ஒப்படைக்கிறார் பஜ்ரங் புனியா. ஏற்கனவே மல்யுத்த போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்திருந்தார்.
நீதிக்கான போராட்டத்தில் 12 பெண் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் விரட்டினார் என்ன பஜ்ரங் புனியா கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றவர் பஜ்ரங் புனியா.
मैं अपना पद्मश्री पुरस्कार प्रधानमंत्री जी को वापस लौटा रहा हूँ. कहने के लिए बस मेरा यह पत्र है. यही मेरी स्टेटमेंट है। 🙏🏽 pic.twitter.com/PYfA9KhUg9
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 22, 2023