பழம்பெரும் நடிகை புஷ்பலதா இன்று மாலை  உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் இன்று சென்னையில் உடல் நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருடைய கணவர் பிரபல நடிகர் ஏவிஎம் ராஜன். இவர் கடந்த 1961 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான கொங்கு நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இவர் வசந்த மாளிகை, ராஜபார்ட தங்கதுரை உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் இவர் தன்னுடைய கணவர் ஏவிஎம் ராஜனுடன் இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் ஹிந்தி மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்துள்ளார். மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.‌