
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்திய ராணுவம் தீவிரவாதிகளின் வேட்டையை தொடங்கியுள்ளது. அதன் பிறகு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தீவிர படுத்தியுள்ளது.
இதற்கிடையில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளதால் போர் பதற்றமும் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 சுற்றுலா தளங்களை மூடியுள்ளனர்.