
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு இந்தியா விரைந்து நிலையில் அவசர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீருக்கு நேரடியாக சென்றுள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பற்றிய லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தாங்கள் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது கிடையாது என்றும் கூறியுள்ளார்.