ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீ நகருக்கு விரைந்து சென்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பஹல்கான் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதிவு உள்ளதாக தகவல் வெளியானதால் மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதல் காரணமாக சவுதி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். அவர் விமானப்படையின் போயிங் 777-300 விமானத்தில் பயணித்தார்.

அந்த விமானம் பாகிஸ்தான் வான் பரப்பை தவிர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி நோக்கி சென்ற போது விமானம் பாகிஸ்தான் வான் பரப்பில் சென்றது. ஆனால் தற்போது பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வான் பரப்பை தவிர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.