பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருந்தவர் நடிகை ராஞ்சனா நாச்சியார். இவர் பாஜக மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வலியுறுத்துவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான் என்றும் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதால் பாஜகவில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை என்று கூறி விலகினார்.

இந்த நிலையில் தற்போது அவர் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைய இருக்கிறார். இதற்காக அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்தார். மேலும் அவரிடம் நிருபர்கள் இது பற்றி கேட்டபோது தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைய இருப்பதாக கூறினார்.