தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தற்போது அதிமுக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த மாதம் 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

அதன்படி அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பாஜகவுடன் கூட்டணி மற்றும் கட்சியிலிருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.