புதுச்சேரியில் பாஜக கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜக கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக உமாசங்கர் என்பவர் இருந்தார். இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உமாசங்கர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தனர்.

அவர்கள் உமாசங்கரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் நேற்று இரவு கருவடிக்குப்பம் பகுதியில் நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.