
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகியான அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படு கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததோடு, உளவு பார்க்கும் வேலையிலும் அஞ்சலை ஈடுபட்டுள்ளார். இந்த தொடர்பின் அடிப்படையில் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.