தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் அசின் நடிப்பில் வெளிவந்த மஜா திரைப்படத்தை இயக்கியவர் ஷபி. இவர் மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். இவர் நடிகரும் கூட. இவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு பக்கவாதமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஷபி அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் 5 நாட்களாகியும் அவருடைய உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு தற்போது 56 வயது ஆகும் நிலையில் மலையாள திரை உலகில் வெளிவந்த கல்யாணராமன், புலிவால் கல்யாணம் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.இவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த நிலையில் தற்போது மரணம் அடைந்து விட்டார். மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.