குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடைச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  துவங்கியது. அதாவது, நீதிபதிகள் கே.எம். ஜோஸப் மற்றும் நாகரத்னா அமர்வு வழக்கை விசாரிக்கிறது.

தமிழ்நாடு அரசு சார்பாக வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகினார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மற்றொரு தினத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.