
பொங்கல் பண்டிகையையொட்டி, பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை பூ ரூ.2000, பிச்சி பூ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்ததால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.