
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. WhiteField பகுதியில் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் இடம் ராமேஸ்வரம் கஃபே. இதில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியது. இவ்விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பின்னர் அது சிலிண்டர் அல்லது பாய்லர் வெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
எச்ஏஎல் காவல் நிலையத்திற்குட்பட்ட குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால், ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல்களின்படி, ஓட்டலில் ஒரு பையில் வைத்திருந்த மர்ம பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு, கைரேகை நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் விரைந்து வந்தனர். ஓட்டலைச் சுற்றியுள்ள பகுதி காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஒயிட்ஃபீல்டு தீயணைப்பு நிலையத்தினர் கூறுகையில், “ராமேஸ்வரம் ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம்” என தெரிவித்தார்.
இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.பிற்பகல் 1 மணியளவில் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்து கஃபே மற்றும் அதைச் சுற்றி கறுப்புப் புகையை ஏற்படுத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தடயவியல் குழுக்கள் பொருட்களை சேகரித்து வருவதாகவும், குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் சோதனைகளுக்குப் பிறகு கண்டறியப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | An explosion occurred at The Rameshwaram Cafe in Whitefield, Bengaluru. Injuries reported. Details awaited. pic.twitter.com/9Ay3zBq3vr
— ANI (@ANI) March 1, 2024
Explosion at The Rameshwaram Cafe in Whitefield, Bengaluru#RameshwaramCafe #Bangalore #BreakingNews#sneachta pic.twitter.com/hZueWzrzS0
— Sitaram Meghwanshi (@sr_panchota) March 1, 2024