IND – PAK இடையேயான ‘சூப்பர் 4’ போட்டி இன்னும் ஒருமணிநேரத்தில் உள்ள நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. நேற்றைய போட்டி மழையால் நிறுத்தப்பட்டதால், இன்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் மழை பெய்து வருவதால், போட்டி நடக்குமா? நடக்காதா? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மழை விட்டதும் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.