
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தற்போது ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு மற்றும் போதைப்பொருள் வழக்கு போன்றவைகளில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இவரை அமலாக்கத்துறை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பலருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இவர் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஜாபர் சாதிக் மற்றும் அவருடைய நண்பர் சலீம் ஆகியவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது. மேலும் மணீஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து நீதிமன்றம் ஜாமின் வழங்குவதாக கூறியுள்ளது.