
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன.
மகாராஷ்டிரா சோலாப்பூர் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கக்கூடிய அகமதுநகர் ரயில் நிலையத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்ல வேலையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 5 பெட்டிகள் முதற்கட்டமாக தீப்பிடித்து எரிந்துள்ளன. பின்னர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகள் என்பதால் பயணிகள் இறகுவதற்கு உடனடியாக வாய்ப்பாக அமைந்தது.
#Maharashtra: Fire engulfs five coaches of passenger train in Ahmednagar district; no casualties. #TrainAccident #Railway #IndianRailway #IsraelGazaWar #AUSvsSL #Tiger3Trailer #BossSauceByNaukri #KGF2 #olympics2028 pic.twitter.com/wZsldYs2AK
— Vidarbha Times (@VidarbhaaTimes) October 16, 2023