
தமிழ்நாட்டில் பாஜக தோல்வியைத் தழுவியபோதும், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, மோடி தலைமையிலான அமைச்சரவையில் அண்ணாமலை, தமிழிசைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பாத யாத்திரை, பாஜக தலைவர்களின் சூறாவளி பரப்புரை காரணமாக பாஜகவின் வாக்கு அதிகரித்துள்ளதால், இருவருக்கும் முக்கிய இலாக்கா ஒதுக்கப்படும் என தெரிகிறது.