
தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக அவசியம். பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும், நெறிமுறைகளையும், போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், பள்ளி சிறுவர், சிறுமியர் முதியவர்கள், சிரமப்பட்டு வர வேண்டாம் என கூறியுள்ளார்.