
பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, மாநில சுயாட்சியை உறுதி செய்ய ஒன்றிய- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்படும்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் ஷெட்டி திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் இதில் உறுப்பினர்களாக இருப்பர். 2026 ஜனவரி இறுதிக்குள் இடைக்கால அறிக்கை இரண்டு ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.