
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் படிக்கும் சில ஆதிக்க ஜாதி மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி தாக்கப்பட்டான்.
தலித் மாணவன் ஆன சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றான்.
இந்நிலையில் மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆன்லைன் செயலி மூலமாக சிலர் சின்னதுரையுடன் பழகிய நிலையில் இன்று ரெட்டியார்பட்டி பாலம் அருகே வரவழைத்துள்ளனர். பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் மாணவனின் செல்போனை பறித்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் சின்ன துரைக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறை உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று சின்னதுரையிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.