
பிரபல youtubeர் சவுக்கு சங்கர் அவதூறு மற்றும் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனியில் தங்கி இருந்தபோது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு தற்போது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த நிலையில் பின்னர் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதால் கடந்த செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். தற்போது மீண்டும் கோர்ட் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதால் அவர் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.