அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது சென்னை வில்லிவாக்கம்  காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது சென்னையில் நில ஆவணம் தொலைந்து விட்டதாகவும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் காவல் ஆய்வாளர் சான்றிதழ் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதோடு எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு அவர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் தான் தற்போது பிருத்திவிராஜ் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே பிருத்திவிராஜ் கரூரில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.