
முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது. ஒருவேளை உடைந்தால் லட்சக்கணக்கான உயிர் பறிபோகும். அந்த அணையை ஆய்வு செய்து திட்டத்தை வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் கூறியதாவது, பல ஆண்டுகள் கடந்தும் முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவே உள்ளது.
அணை உடைந்து விடும் என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாக கூறுவது காமிக் கதைகளை போலவே பார்க்க முடிகிறது. சுமார் 130 ஆண்டுகளுக்கு மேலான முல்லைப் பெரியாறு அணை எத்தனை பருவ மழை கண்டுள்ளது. இன்னும் நிலையாகவே உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.