அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதாக புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் கூறி இருந்த நிலையில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை ராணுவ விமானங்கள் மூலமாக நாடு கடத்தி வருகிறார்கள்.அந்த வகையில் சமீபத்தில் 187 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தினர். அப்போது இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுக்கும்போது இது வழக்கமான நடைமுறைதான் இருப்பினும் இந்தியர்களை மரியாதையுடன் நடத்த அமெரிக்காவுக்கு வலியுறுத்துவோம் என்று கூறி இருந்தனர்.

நாடு கடத்தப்பட்டவர்கள் கை விலங்கோடு இருந்ததுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கிட்டத்தட்ட விமானத்தில் வரும்போது 40 மணி நேரமாக அப்படிதான் இருந்ததாகவும் கழிவறை கூட செல்ல முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்களை நாடு கடத்த தற்போது திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த தகவல் வெளியான நிலையில் அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.