ரஜினிகாந்த் என்ற பெயரையோ அல்லது போட்டோ, குரலையோ அனுமதியில்லாமல் அடுத்தவர் பயன்படுத்த நடிகர் ரஜினிகாந்த் தடை விதித்திருக்கிறார். ரஜினிகாந்த் சார்பில் வழக்கறிஞர் சுப்பையா விடுத்திருக்கும் பொது அறிவிப்பில், “ரஜினிகாந்தின் போட்டோக்கள், கம்ப்யூட்டர் அனிமேஷன் என அனைத்துமே ரஜினிக்கு மட்டுமே சொந்தம். இதனை அடுத்தவர் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.