
கேரள மாநிலத்தில் நேற்று நடந்த ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது நிவாரணம் அறிவித்துள்ளார். அதாவது உயிரிழந்த அனைவரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள்.
இவர்கள் நால்வரும் பாரதப்புழா ஆற்றின் குறுக்கே ரயில்வே தண்டவாளத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென ரயில் வந்து அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நால்வரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.